கார்கால பின்னிரவில். .
புதிதாய் குளித்த சாலை தன்னில். .
அன்பேனும் குடையின் கீழ். .
நட்பேனும் உன் கைவிரல் கோர்த்து. .
நம் இருவர் பாதங்களும் ஒன்றாய் நீரினில் இசைத்து
பயனிப்பது என்றோ?
மார்கழி மாதம்…
அதிகாலைப் பொழுது…
வெண் முத்துக்கள் ஏந்திய பசுமைவெளி…
வின்னைத்தொட ஏங்கும் வெண்முகில் போர்த்திய மலைகள்…
சலங்கையாய் இசைத்திடும் வெண்போதிகை…
மனங்களை மயக்கிடும் குயில்களின் யாழிசை…
இவற்றின் இடையே ஓர் இரயில் பயணம்…
ஜன்னல் ஓரம் மழைச்சாரல்…
என் இதயம் குளிர்கிறது இவைகளினால் அல்ல…
சிறு மழழையாய் என் மடியில் புதைந்திருக்கும் உன்னை இரசித்து கொண்டிருப்பதினால். . .
ஒவ்வொரு நொடியும் இருளாய் கரைகிறது என் வாழ்க்கை
பயணிக்கிறேன் விடியலைத் தேடி. . .
ஒளியின் பயணம் விழிகளைத் தேடி…
இரவின் பயணம் விடியலைத் தேடி…
நதியின் பயணம் கடலினைத் தேடி…
(என்)உயிரின் பயணம் (உன்) அன்பினைத் தேடி…
உலகை சுற்றும் நிலவு போல்
அன்பே…
உன்னை சுற்றுகிறேன் நான்!!!

Leave a Reply