மழைக்காதலன் கவிதைகள்…

என்னவள் காதலுக்கு கவிதாஞ்சலி ...

காதல் இரவுகள். . .

நிலவின்றி தவிக்கின்றன
என் இரவுகள்
அன்பே…
உன் பிரிவினால். . .


நிசப்தமான பின்னிரவில்
நம் இரு மனங்களும்
இசைத்திடும்
காதல் வரிகளை. . .


இரவின் இசையினில். . .
விழி மூடி துயில் கொள்ளும் நொடியினில்
உதயமாகிறது. . .
உன்னுடனான என் விடியல். . .


துளித்துளியாய்
உன் நினைவைத் தழுவி பொழிகிறது கார்மழை..
என்னவளே…
இன்றிரவு முழுதும் என் மார்பினில் பொழிந்திடு முத்தமழை..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *