சிரித்துக் கொண்டே வீழ்த்தி விட்டாய் என்னை…
வீழ்ந்து விட்டேன் நான் –
உன் கண்ணகுழியில்!!!
கதிரவனின்றி ஒளியில்லை..
ஒளியின்றி உலகில்லை..
உலகின்றி உயிரில்லை..
உயிரின்றி உணர்வில்லை..
என் கதிரவனாய்.. ஒளியாய்.. உலகாய்.. உணர்வாய் ஆன
நீயின்றி நாம் இல்லை..
நாம் இன்றி நானில்லை..
என் காதல் மனைவியே..
சூரியனோ உன் விழிகள்..
உருகியதென் இதழ்கள்…
பறவைகளின் சிறகுகளாய் படபடக்கின்றன என் இதயம்..
உன்னில் அணைந்து கொள்ள பற்றி எரிகிறதென் காயம்…
என் காதல் மனைவியே..
வருடங்கள் பல காத்திருந்து…
மாதங்கள் பல நேசித்து…
வாரங்கள் பல அளவளாவி…
நாட்கள் பல ஒன்றாய் நடந்து…
மணிகள் பல வேள்வி புரிந்து…
நிமிடங்கள் பல கை கோர்த்து…
நொடிகளில் மூன்று முடிச்சிட்டு…
யுகங்கள் பல ஒன்றாய் வாழ…
கரம் பிடித்தேன் உனை நான்…
என் காதல் மனைவியே…
காலையில் பூத்த மலராக நீ..
உன் மீது உறைந்திருக்கும் பனித்துளியாக நான்…
என் காதல் மனைவியே…
பட்டொளி வீசும் பௌர்ணமி இரவில்..
பெய்து ஓய்ந்த மழைச்சாரலில்…
(உன்) மெல்லுடல் வருடும் குளிர் தென்றலில்…
(நான்) உன் பூவிதழ் தீண்ட…
நாணத்தில் எனை (நீ) ஈர்க்க…
காதல் கொண்டேன் உனை (நான்)…
என்னை பார்த்த நொடி நீ உதிக்கும் புன்னகையால் மறைந்திடும் பிரிவின் சுவடுகள்…
காதல் மிகுந்து, கூடல் கொண்டு..
உடல் அனைத்து, உன் விழிகளில் என்னைத் தேட..
மோகப்புன்னகை கொண்டு, விழி மயங்கி..
நாணம் கொண்டு, என் மார்பினில் நீ உன் முகம் புதைக்க..
மோகத் தீயில் எரிந்தது என் தேகம்…
அணைந்தது உன் மார்பினில்!
என் பார்வை பட்டதும், உன் நாணம் நழுவியது…
என் இதழ் பற்றியதும், உன் விழி மூடியது…
என் கரம் பற்றியதும், உன் இடை தளர்ந்தது…
உன் மேனி பருகியதும், என் தேகம் தாகம் தணித்தது…

Leave a Reply