நிலவின்றி தவிக்கின்றன
என் இரவுகள்
அன்பே…
உன் பிரிவினால். . .
நிசப்தமான பின்னிரவில்
நம் இரு மனங்களும்
இசைத்திடும்
காதல் வரிகளை. . .
இரவின் இசையினில். . .
விழி மூடி துயில் கொள்ளும் நொடியினில்
உதயமாகிறது. . .
உன்னுடனான என் விடியல். . .
துளித்துளியாய்
உன் நினைவைத் தழுவி பொழிகிறது கார்மழை..
என்னவளே…
இன்றிரவு முழுதும் என் மார்பினில் பொழிந்திடு முத்தமழை..

Leave a Reply