நதியெனும் உன் வாழ்வில்,
கரையென நான்…
என் பிரிவின் வலிதனில்,
அன்பெனும் அரவணைப்பு நான்..
தனிமை இரவினில், தலையணை நான்..
உன் கனவின் காதல் கணவன் நான்…
உன்னில் புதைந்துள்ள என் நினைவுகள் நான்..
தனிமை பற்றி கவிதை புனைய
துவங்கினேன் அன்பே..
உன் நினைவுகளை என் மனதில் சுமந்துகொண்டு!!!
இரயில் தடங்களோடு பயணிக்கும் ரயில் போல்…
என்றும்…
உன் நினைவுகளுடன் பயணிக்கிறது…
என் வாழ்க்கை!!!
உன் நினைவுகளில் மூழ்கியதால்
துடிப்பதை நிறுத்திக்கொண்டது
என் இதயம்!!!
ரோஜா இதழ்களைக் கூட பறிக்காத நீ
எப்படி பறித்தாய் என் இதயத்தினை…
உன் நினைவுகளால் மட்டுமே உயிர் வாழ்கிறேன்!!!
ஆயிரமாயிரம் அலைகள் மோதினாலும் கறையாத (கடற்)கரையாய் இருந்துவிடவே நினைத்து தோற்றேன்!!!
உன் ஒரு நினைவலை மொதியவுடன்!!!
(உன் நினைவுகளில் முழுவதுமாய் கரைந்து விடுகிறேன்!!!)
செந்நிற கடலினில்
உறங்கும் மாலைநேர கதிரவன் போல்
என் நினைவுகளில் என்றும் உறங்குகிறாய். . .
என் ஆருயிரே. . .
இலக்கணம் இல்லா இலக்கியமானது
(என்னவள் இல்லா) என் வாழ்க்கை!!!

Leave a Reply